மாவட்ட செய்திகள்

சிதம்பரத்தில், குளத்தில் மூழ்கி கொத்தனார் சாவு + "||" + Chidambaram, Drowning in the pool Death of kotanar

சிதம்பரத்தில், குளத்தில் மூழ்கி கொத்தனார் சாவு

சிதம்பரத்தில், குளத்தில் மூழ்கி கொத்தனார் சாவு
சிதம்பரத்தில் குளத்தில் மூழ்கி கொத்தனார் உயிரிழந்தார்.
சிதம்பரம்,

சென்னை ஆவடியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 40). கொத்தனார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் சிதம்பரம் ஓமக்குளம் எடத்தெருவில் உள்ள தனது அக்காள் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள குளத்திற்கு பழனிவேல் குளிப்பதற்காக சென்றார். இந்நிலையில் கால் தவறி எதிர்பாராதவிதமாக அவர் குளத்தின் உள்ளே விழுந்ததாக தெரிகிறது.

இதில் தண்ணீரில் மூழ்கிய அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் பழனிவேல் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பிணமாகவே அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த சிதம்பரம் நகர போலீசார், பழனிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.