மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையின் 6-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை + "||" + Patient commits suicide by jumping from 6th floor of Government Hospital

அரசு மருத்துவமனையின் 6-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை

அரசு மருத்துவமனையின் 6-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை
திருச்சி அரசு மருத்துவமனையின் 6-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி,

திருச்சி கல்லுக்குழி முடுக்குப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் கணேசமூர்த்தி (வயது 34). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் கோவையில் ஒரு தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி அவர் ஊருக்கு வந்தார். அதன்பிறகு மீண்டும் வேலைக்கு செல்லவில்லை.


இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி கணேசமூர்த்திக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகாததால் டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் என கருதி அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவ மனையில் கடந்த 22-ந் தேதி முதல் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவரை பரிசோதித்தபோது, கடுமையான காய்ச்சலுடன் மஞ்சள் காமாலை பாதிப்பும் இருந்தது..

மாடியில் இருந்து குதித்து தற்கொலை

இதையடுத்து அரசு மருத்துவமனையின் 6-வது மாடியில் உள்ள வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்றும் காய்ச்சல் முழுமையாக குணம் அடையாததால் அவர் சற்று மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். நேற்று காலை 7.30 மணி அளவில் கணேசமூர்த்தியின் தந்தை நாகராஜ் உணவு வாங்குவதற்காக சென்று விட்டார்.

இதையடுத்து கணேசமூர்த்தி திடீரென எழுந்து மொட்டை மாடிக்கு சென்றார். அங்கிருந்து கீழே குதித்தார். இதில் அவர் பிணவறை பகுதியில் விழுந்து படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கூச்சலிட்டபடி அருகே ஓடிச்சென்று பார்த்தனர். பின்னர் உடனடியாக மருத்துவமனை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிதுநேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

தாய்-தந்தை கதறல்

கணேசமூர்த்தி 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அவரது தந்தை நாகராஜ், தாய் மீராபாய் ஆகியோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

திருச்சி அரசு மருத்துவ மனையின் மொட்டை மாடி கதவு எப்போதும் பூட்டப்பட்டு தான் இருக்கும். ஆனால் கணேசமூர்த்தி மொட்டை மாடிக்கு சென்றபோது கதவு திறந்து இருந்துள்ளது. மொட்டை மாடியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீரை திறப்பதற்காக பிளம்பர் சென்றநேரத்தில் கணேசமூர்த்தியும் பின்தொடர்ந்து சென்று கீழே குதித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. தம்மம்பட்டியில் மேற்படிப்பு படிக்க வசதி இல்லாததால் பட்டதாரி பெண் தற்கொலை
தம்மம்பட்டியில் பட்ட மேற்படிப்பு படிக்க வசதி இல்லாததால் பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
2. மனைவியுடன் பால் வியாபாரி தற்கொலை மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க முடியாததால் விபரீதமுடிவு
மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க முடியாத விரக்தியில் மனைவியுடன் பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. திருமானூர் அருகே தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை
திருமானூர் அருகே தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. சரியாக படிக்காததை தாயார் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
சிவகிரி அருகே சரியாக படிக்காததை தாயார் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
5. தென்தாமரைகுளம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை நண்பரை தாக்கிய மன வருத்தத்தில் விபரீத முடிவு
தென்தாமரைகுளம் அருகே நண்பரை தாக்கிய மன வருத்தத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.