மாவட்ட செய்திகள்

மார்த்தாண்டத்தில் 2 கடைகளில் 10 லேப்-டாப்கள், பணம் திருட்டு ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை + "||" + 10 lap-tops at 2 stores in Marthandam, one held by police for cash theft

மார்த்தாண்டத்தில் 2 கடைகளில் 10 லேப்-டாப்கள், பணம் திருட்டு ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை

மார்த்தாண்டத்தில் 2 கடைகளில் 10 லேப்-டாப்கள், பணம் திருட்டு ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை
மார்த்தாண்டத்தில் 2 கடைகளில் லேப்-டாப்கள், பணம் திருடப்பட்டது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மார்த்தாண்டம்,

மார்த்்தாண்டம் சந்திப்பு பகுதியில் சி.எஸ்.ஐ.வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் 3-வது தளத்தில் மார்த்தாண்டம் அருகே மாராயபுரம் பகுதியை ேசர்ந்த சுனில்குமார்(வயது 42) என்பவர் கணினி விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் மையம் நடத்தி வருகிறார்.


நேற்று முன்தினம் இரவு சுனில்குமார் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு சென்றார்.

நேற்று காலை வழக்கம்போல் சுனில்குமார் கடையை திறக்க வந்தார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மேஜையில் இருந்த ரூ.85 ஆயிரம், 7 விலை உயர்ந்த புதிய ேலப்-டாப்கள் மற்றும் பழைய லேப்-டாப்கள் திருட்டுபோய் இருந்தன.

இதுபற்றி சுனில்குமார் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

தக்கலை உதவி போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும், அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் முதல் தளத்தில் உள்ள தொலையாவட்டம் பகுதியை சேர்ந்த பென்சிகர் என்பவரது எலக்ட்ரானிக் கடையில் பூட்டை உடைத்து உள்ளே செல்வதும், அங்கிருந்த டார்ச் லைட் மற்றும் பொருட்களை திருடிவிட்டு வெளியே வருவதும் ெதரியவந்தது.

பின்னர் அந்த வாலிபர் 3-வது தளத்தில் உள்ள சுனில்குமாரின் கடைக்குள் புகுந்து மேஜையில் இருந்த பணத்தை எண்ணுவதும், பிறகு 10 லேப்-டாப்களை எடுத்து செல்வதும் பதிவாகி இருந்தது. அதிகாலை 2½ மணியில் இருந்து 5½ மணி வரை 3 மணிநேரம் உள்ளே இருந்து கைவரிசை காட்டியதும் தெரியவந்தது.

ஒருவரை பிடித்து...

மேலும், மோப்பநாய் ‘ஓரா’ வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் கடையில் இருந்து மோப்பம் பிடித்து குழித்துறை ரெயில்நிலையம் வரை ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து சுனில்குமார், பென்சிகர் ஆகியோர்் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள வாலிபரின் உருவத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து பல திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒரு வாலிபரின் தந்தையை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூரில் கடையில் செல்போன் திருடிய அண்ணன்-தம்பி கைது
திருப்பூர் போயம்பாளையம் அருகே கடையில் செல்போன் திருடிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
2. சிறுவாச்சூரில் 2 வீடுகளில் 6¾ பவுன் நகை திருட்டு
சிறுவாச்சூரில் 2 வீடுகளில் 6¾ பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. திருச்சியில் பல்வேறு பகுதிகளில் 6 மோட்டார் சைக்கிள், ஆட்டோ சக்கரங்கள் திருட்டு
திருச்சியில் ஆட்டோ சக்கரங்கள் மற்றும் 6 மோட்டார் சைக்கிள்கள் திருட்டுபோனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. வேப்பந்தட்டை அருகே வரதராஜ பெருமாள் கோவில் உண்டியலை திருடிச்சென்ற மர்ம நபர்
வேப்பந்தட்டை அருகே வரதராஜபெருமாள் கோவில் உண்டியலை மர்ம நபர் திருடிச்சென்றார். கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த உருவத்தை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. வேலூரில் வியாபாரி வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் திருட்டு
வேலூரில் வியாபாரி வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை திருடிச்சென்றுவிட்டனர்.