செங்கல்பட்டு அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் 5-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு


செங்கல்பட்டு அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் 5-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2019 3:30 AM IST (Updated: 4 Dec 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதில் 5-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சாஸ்தரம்பாக்கத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அங்கு உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி நேற்று அடித்து செல்லப்பட்டது.

இதனால் வில்லியம்பாக்கம் சாஸ்தரம்பாக்கம், வென்பாக்கம், வெங்கடாபுரம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.

இது குறித்து அந்த பகுதிமக்கள் கூறியதாவது:-

ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்த தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. இது நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஒவ்வொரு மழையின் போதும் நாங்கள் பாதிப்புக்குள்ளாகிறோம். ஆகவே இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story