மாவட்ட செய்திகள்

தர்மபுரியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + Dravidian League protest in Dharmapuri

தர்மபுரியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நீட்தேர்வு, மத்திய அரசின் கல்வி கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நீட்தேர்வு, மத்திய அரசின் கல்வி கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏங்கல்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அர்ஜூனன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் சிவாஜி, செயலாளர் காமராஜ், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தர்மபுரி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன், தலைமை பேச்சாளர் அன்பழகன், மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் நிர்வாகிகள் செல்லதுரை, சின்னசாமி, பூவரசன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் பயிற்சி முகாமை நடத்தியதை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் குத்தாலம் அருகே பரபரப்பு
குத்தாலம் அருகே கழிவறை வசதி இல்லாத தேரழந்தூர் கம்பர் கோட்டத்தில் தேர்தல் பயிற்சி முகாமை நடத்தியதை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
2. கள்ளக்குறிச்சியில் தடையை மீறி தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் - 128 பெண்கள் உள்பட 271 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் தடையை மீறி தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 128 பெண்கள் உள்பட 271 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகலை எரித்து அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகலை எரித்து திரு.வி.க. அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய 6 மாணவர்கள் கைது
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.