மாவட்ட செய்திகள்

விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ந‌‌ஷ்டஈடு வழங்காததால் ராசிபுரத்தில் அரசு பஸ் ஜப்தி + "||" + The family of the deceased died Government bus jazti in Rasipuram due to non-payment of compensation

விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ந‌‌ஷ்டஈடு வழங்காததால் ராசிபுரத்தில் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ந‌‌ஷ்டஈடு வழங்காததால் ராசிபுரத்தில் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ந‌‌ஷ்டஈட்டு தொகை வழங்காததால், ராசிபுரத்தில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராசிபுரம்,

ராசிபுரம் அருகேயுள்ள குருக்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொண்டி. இவர் கடந்த 5.4.2013-ந் தேதி ராசிபுரம் - திருச்செங்கோடு சாலையில் குருக்கபுரம் காலனி தண்ணீர் டேங்க் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சேலம் கோட்டத்தை சேர்ந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கொண்டி இறந்தார்.


இதையொட்டி விபத்தில் இறந்த கொண்டியின் மகன் கொண்டன், வக்கீல் பி.செந்தில்குமார் மூலம் ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் ந‌‌ஷ்டஈடு கேட்டு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்றம், கொண்டியின் குடும்பத்திற்கு கடந்த 22.3.2017-ந் தேதி ந‌‌ஷ்டஈடாக ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 40-ஐ வட்டியுடன் வழங்கும்படி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டது.

பஸ் ஜப்தி

இந்த ந‌‌ஷ்டஈட்டுத் தொகையை அரசு போக்குவரத்துக் கழகம் வழங்காததால், அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படியும், வட்டியுடன் சேர்த்து ரூ.2 லட்சத்து 88 ஆயிரத்து 720-ஐ வழங்கும்படியும் நிறைவேற்று மனுவை சார்பு நீதிமன்றத்தில் கொண்டன் தாக்கல் செய்தார். இருந்தாலும் ந‌‌ஷ்டஈட்டுத் தொகையை அரசு போக்குவரத்துக்கழகம் செலுத்தாததால் ராசிபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி சி.எம்.சரவணன் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று நாமக்கல்லில் இருந்து ராசிபுரம் பஸ் நிலையத்திற்கு வந்த சேலம் கோட்டத்தை சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக டவுன் பஸ்சை ராசிபுரம் சார்பு நீதிமன்ற ஊழியர் (அமீனா), வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரருடன் அரசு பஸ்சை ஜப்தி செய்தார். ஜப்தி செய்யப்பட்ட அரசு டவுன் பஸ்சை ராசிபுரம் சார்பு நீதிமன்றத்திற்கு நீதிமன்ற ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் ராசிபுரம் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆலத்தூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 2 மாணவர்கள் பலி
ஆலத்தூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியாயினர்.
2. விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம் ஆட்டோ டிரைவருக்கு பொருத்தப்பட்டது
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இதயம் செயலிழந்து சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ டிரைவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
3. உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதல்: புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதியதில் புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலியாகினர்.
4. திருமானூர் அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பார்வையாளர் பலி; 36 பேர் காயம்
கோக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பலியானார். 36 பேர் காயம் அடைந்தனர்.
5. வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் பார்வையாளர் பலி; 25 பேர் காயம்
அன்னவாசல் அருகே வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 25 பேர் காயமடைந்தனர்.