மாவட்ட செய்திகள்

கொடுமுடி அருகே தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து முதியவர் காயம் + "||" + Elderly man injured after heavy rain falls near Kodumudi

கொடுமுடி அருகே தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து முதியவர் காயம்

கொடுமுடி அருகே தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து முதியவர் காயம்
கொடுமுடி அருகே தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்தது. இதில் முதியவர் காயம் அடைந்தார்.
கொடுமுடி,

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சின்னாகண்டனூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 75). அவருடைய மனைவி சின்னம்மாள். இவர் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனால் ஆறுமுகம் தனியாக வசித்து வருகிறார்.


கொடுமுடி பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஆறுமுகத்தின் வீட்டின் கான்கிரீட் மேற்கூரை மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திடீரென இடிந்து விழுந் தது.

காயம்

இதில் ஆறுமுகம் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டு் காயம் அடைந்தார். வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.

உடனே அவரை மீட்டு் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி: ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு, கடைகள் அகற்றம் - பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
புதுச்சேரி - விழுப்புரம் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிக்காக சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடு, கடைகள் அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. திருக்கடையூர் அருகே மழை: தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது
திருக்கடையூர் அருகே மழை காரணமாக தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது.
3. நாமக்கல், திருச்செங்கோட்டில் வீடு, கடைகளில் திருடியவர் கைது
நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் வேலூரில் வீடு, கடைகளில் நகை, பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 30 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
4. கூடலூரில் வீடு, ரே‌‌ஷன் கடையை இடித்து காட்டுயானைகள் அட்டகாசம்
கூடலூரில் வீடு, ரே‌‌ஷன் கடையை இடித்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
5. கிராம மக்களிடம் நிதி திரட்டி இடிந்த வாய்க்கால் பாலத்தை இளைஞர்கள் சீரமைத்தனர்
பூதலூர் அருகே இடிந்த வாய்க்கால் பாலத்தை, கிராம மக்களிடம் நிதி திரட்டி இளைஞர்கள் சீரமைத்தனர்.