மாவட்ட செய்திகள்

மூங்கில்துறைப்பட்டு அருகே, ஓடையில் வாலிபர் பிணம் - போலீஸ் விசாரணை + "||" + Near munkilturaippattu, The young men dead in the stream - Police investigation

மூங்கில்துறைப்பட்டு அருகே, ஓடையில் வாலிபர் பிணம் - போலீஸ் விசாரணை

மூங்கில்துறைப்பட்டு அருகே, ஓடையில் வாலிபர் பிணம் - போலீஸ் விசாரணை
மூங்கில்துறைப்பட்டு அருகே ஓடையில் வாலிபர் பிணமாக கிடப்பது தெரியவந்தது.இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மூங்கில்துறைப்பட்டு, 

சங்கராபுரம் அருகே உள்ள பரமநத்தம் பகுதியைச்சேர்ந்த ராயபிள்ளை என்பவரது மகன் அம்சவேல்(வயது 28). இவர் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள லக்கிநாயக்கன்பட்டியில் கூலிவேலை செய்து வந்தார். கடந்த 1–ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அம்சவேல் பின்னர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதனால் உறவினர்கள் அவரை பல இடங்களிலும் தேடினார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் லக்கிநாயக்கன்பட்டியில் உள்ள ஓடையில் அம்சவேல் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் எப்படி செத்தார்? என்பது மர்மமாக உள்ளது. இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த அம்சவேலுக்கு நதியா(25) என்ற மனைவியும் லக்க்ஷிதா(3) என்ற குழந்தையும் உள்ளனர்.