மாவட்ட செய்திகள்

பள்ளிபாளையத்தில் கார் மோதி சாயப்பட்டறை தொழிலாளி பலி + "||" + In pallipalaiyat The car crashed The dye worker dies

பள்ளிபாளையத்தில் கார் மோதி சாயப்பட்டறை தொழிலாளி பலி

பள்ளிபாளையத்தில் கார் மோதி சாயப்பட்டறை தொழிலாளி பலி
பள்ளிபாளையத்தில் கார் மோதி சாயப்பட்டறை தொழிலாளி இறந்தார்.
பள்ளிபாளையம், 

சேலம் அம்மாபாளையம் ஏரி பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 35). இவர் தற்போது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வெடியரசம்பாளையத்தில் வசித்து வந்தார். அதே பகுதியில் ஒரு சாயப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் வேலை முடிந்து சங்ககிரி செல்லும் சாலையில் நடந்து வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.

அப்போது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் ஒன்று ரோட்டை கடக்க முயன்ற சுகுமார் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சுகுமார் அதே இடத்தில் இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கார் மோதி மகனுடன் கர்ப்பிணி சாவு
மாமல்லபுரம் அருகே புதிய கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்ற நிறைமாத கர்ப்பிணி, தன் மகனுடன் கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
2. உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதல்: புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதியதில் புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலியாகினர்.
3. மாமல்லபுரம் அருகே, கார் மோதி மகனுடன் கர்ப்பிணி சாவு
மாமல்லபுரம் அருகே புதிய கல்பாக்கம் கிழக்கு கடற் கரை சாலையை கடக்க முயன்ற நிறைமாத கர்ப்பிணி, தன் மகனுடன் கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
4. திருமானூர் அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பார்வையாளர் பலி; 36 பேர் காயம்
கோக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பலியானார். 36 பேர் காயம் அடைந்தனர்.
5. வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் பார்வையாளர் பலி; 25 பேர் காயம்
அன்னவாசல் அருகே வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 25 பேர் காயமடைந்தனர்.