மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் அக்னி தீர்த்த குளம் நிரம்பியது + "||" + In Thiruvannamalai The Agni Tirtha pool was filled

திருவண்ணாமலையில் அக்னி தீர்த்த குளம் நிரம்பியது

திருவண்ணாமலையில் அக்னி தீர்த்த குளம் நிரம்பியது
திருவண்ணாமலையில் அக்னி தீர்த்த குளம் நிரம்பியது.
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செங்கம் சாலையில் அக்னி தீர்த்த குளம் பராமரிப்பு இன்றி தூர்ந்து போய் காணப்பட்டது. மேலும் பரிகாரம் செய்பவர்கள் தங்களது உடைமைகள் மற்றும் பரிகார பொருட்களை குளத்திலேயே போட்டுவிட்டு சென்றனர். இதனால் அக்னி தீர்த்த குளம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.

இந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து கோவை மாவட்டம் பேரூர் ஆதினம் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு குளத்தை ரூ.1¼ கோடியில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. பல அடி ஆழம் கொண்ட குளத்தில் இருந்த சகதிகள், குப்பைகள் அகற்றப்பட்டன. அப்போது குளத்தின் வட பகுதியில் ஊற்று ஒன்று தென்பட்டது. அதைத்தொடர்ந்து இக்குளம் 100 சதவீதம் சீரமைக்கப்பட்டு விட்டது.

தற்போது கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அக்குளம் நிரம்பி மகா தீபமலையை பிரதிபலிக்கும் விதமாக காட்சி அளிக்கிறது. வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மகா தீபத்திருநாள் என்பதால் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம் இக்குளத்தில் அழகாய் பிரதிபலிக்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவண்ணாமலையில் புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் 3 பேர் கைது - ஒருதலை காதல் வெறியால் நடந்த கொடூரம்
திருவண்ணாமலையில் புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப தேரோட்டம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப தேரோட்டம் நேற்று நடந்தது. ஒரே நாளில் 5 தேர்களை பக்தர்கள் பரவசத்துடன் இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
3. திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு அதிகாரி வீட்டில் 30 பவுன் நகை திருட்டு
திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 30 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரத்தை திருடிவிட்டு தப்பியுள்ளனர்.
4. திருவண்ணாமலையில் அயோத்தி தீர்ப்பை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் - 55 பேர் கைது
அயோத்தி தீர்ப்பை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 55 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. திருவண்ணாமலை அய்யங்குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் - பக்தர்கள் கோரிக்கை
திருவண்ணாமலை அய்யங்குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.