மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான வாள் சண்டை போட்டி


மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான வாள் சண்டை போட்டி
x
தினத்தந்தி 4 Dec 2019 10:45 PM GMT (Updated: 4 Dec 2019 4:41 PM GMT)

மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவி களுக்கான வாள் சண்டை போட்டி பெரம்பலூரில் நடைபெற்றது.

பெரம்பலூர்,

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக பெரம்பலூர் மாவட்ட அளவிலான 14,17,19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான வாள் சண்டை மற்றும் ஜூடோ, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள், பெரம்பலூரில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது.

போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். போட்டிகள் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. வாள் சண்டை, ஜூடோ, ஜிம்னாஸ்டிக் ஆகிய போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பதக்கம்-சான்றிதழ்

போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் 3 இடத்தை பிடித்த மாணவ-மாணவி களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கான செயலாருமான காமராஜ், உடற்கல்வி ஆசிரியர்களும், இணை செயலாளர்களுமான பிரபாகரன், கார்த்திகேயன் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Next Story