மாவட்ட செய்திகள்

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தயார் நிலையில் வாக்குப்பெட்டிகள் + "||" + Ballot boxes ready for rural local election at Thiruvarur panchayat union office

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தயார் நிலையில் வாக்குப்பெட்டிகள்

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தயார் நிலையில் வாக்குப்பெட்டிகள்
திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தயார் நிலையில் உள்ள வாக்குப்பெட்டிகளை கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர்,

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தயார் நிலையில் உள்ள வாக்குப்பெட்டிகளை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஆனந்த பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-


ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப்பெட்டிகள் பெரிய பெட்டி, நடுத்தர பெட்டி, சிறிய பெட்டி என மூன்று வகையான வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. இப்பெட்டிகளில் பெரிய பெட்டியில் 400 வாக்காளர்கள் 4 வாக்குகள் வீதம் 1,600 வாக்குகளை செலுத்தலாம். நடுத்தர பெட்டியில் 300 வாக்காளர்கள் 4 வாக்குகள் வீதம் 1,200 வாக்குகளை செலுத்தலாம். சிறிய பெட்டியில் 125 வாக்காளர்கள் 4 வாக்குகள் வீதம் 500 வாக்குகளை செலுத்தலாம்.

446 பெட்டிகள் ஒதுக்கீடு

திருவாரூர் ஒன்றியத்திற்கு பெரிய பெட்டி 186, நடுத்தர பெட்டி 59, சிறிய பெட்டி 201 என மொத்தம் 446 பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களுக்கும் வாக்காளர்கள் அடிப்படையில் இந்த வாக்குப்பெட்டிகள் ஒதுக்கீடு செய்து தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கிரு‌‌ஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சுந்தரலிங்கம், திருவாரூர் தாசில்தார் நக்கீரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.200 கோடியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்; கிரண்பெடி ஆய்வு
புதுவையில் ரூ.200 கோடியில் நடைபெறும் சுற்றுலா மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு கவர்னர் கிரண்பெடி ஆய்வு மேற்கொண்டார்.
2. சேலத்தில் 411 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் கலெக்டர் ராமன் வழங்கினார்
சேலத்தில் 411 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் கலெக்டர் ராமன் வழங்கினார்.
3. மாவட்டத்தில், நடப்பாண்டில் 17 ஆயிரம் ஏக்கரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி முத்தரப்பு கூட்டத்தில் கலெக்டர் தகவல்
சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் 17 ஆயிரம் ஏக்கரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக முத்தரப்புஆலோசனைகூட்டத்தில் கலெக்டர் ராமன் தெரிவித்தார்.
4. காரைக்கால் மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பேன் கலெக்டர் பேட்டி
காரைக்கால் மாவட்டமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பேன்’ என்று கலெக்டர் அர்ஜூன் சர்மா கூறினார்.
5. கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் ரூ.3¾ கோடி செலவில் சீரமைப்பு பணி கலெக்டர் ஆய்வு
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதியில் ரூ.3¾ கோடி செலவில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.