மாவட்ட செய்திகள்

பாப்பாரப்பட்டி அருகே, புதுமாப்பிள்ளை,தற்கொலை + "||" + Near Paparapatti, Newgroom suicides

பாப்பாரப்பட்டி அருகே, புதுமாப்பிள்ளை,தற்கொலை

பாப்பாரப்பட்டி அருகே, புதுமாப்பிள்ளை,தற்கொலை
பாப்பாரப்பட்டி அருகே திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ராஜதுரை (வயது23). கட்டிட மேஸ்திரி. கொல்லஅள்ளியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (20). இவர்களுக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ராஜதுரை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ராஜதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. தம்மம்பட்டியில் மேற்படிப்பு படிக்க வசதி இல்லாததால் பட்டதாரி பெண் தற்கொலை
தம்மம்பட்டியில் பட்ட மேற்படிப்பு படிக்க வசதி இல்லாததால் பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
2. மனைவியுடன் பால் வியாபாரி தற்கொலை மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க முடியாததால் விபரீதமுடிவு
மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க முடியாத விரக்தியில் மனைவியுடன் பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. திருமானூர் அருகே தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை
திருமானூர் அருகே தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. சரியாக படிக்காததை தாயார் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
சிவகிரி அருகே சரியாக படிக்காததை தாயார் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
5. தென்தாமரைகுளம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை நண்பரை தாக்கிய மன வருத்தத்தில் விபரீத முடிவு
தென்தாமரைகுளம் அருகே நண்பரை தாக்கிய மன வருத்தத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.