பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி


பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
x
தினத்தந்தி 4 Dec 2019 11:00 PM GMT (Updated: 4 Dec 2019 7:21 PM GMT)

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.

கரூர்,

கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி கரூர் தாந்தோன்றி மலையில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதனை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

இதில் மாணவர்களுக்கான கபடி, வாலிபால், கோ-கோ , கேரம் போர்டு, பூப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. 17 வயது மற்றும் 19 வயது என இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இன்று மாணவிகளுக்கு...

இதில் உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பக்தவச்சலம், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அமலி டைசி, ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உமா, மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் சதீ‌‌ஷ், மகாமுனி, மணிமாறன், ஆகியோர் செய்திருந்தனர். இன்று (வியாழக்கிழமை) மாணவிகளுக்கான போட்டிகளும், நாளை (வெள்ளிக்கிழமை) மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக தடகள போட்டிகளும் நடக்கின்றன.

Next Story