மாவட்ட செய்திகள்

தவுட்டுப்பாளையம் பகவதியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் + "||" + A large number of devotees attended the Thavattupalayam Bhagavathyamman temple festival

தவுட்டுப்பாளையம் பகவதியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

தவுட்டுப்பாளையம் பகவதியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
தவுட்டுப்பாளையம் பகவதியம்மன் கோவில் திருவிழா நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நொய்யல்,

கரூர் மாவட்டம், திருக்காடுதுறை அருகே நத்தமேட்டுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடங்களில் புனிதநீரை எடுத்து கொண்டு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.பின்னர் பகவதியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்பட பல்வேறு பொருட்களால் அபி‌‌ேஷகங்கள் நடந்தது. தொடர்ந்து பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனை நடைபெற்றது.


பக்தர்கள் நேர்த்திக்கடன்

தொடர்ந்து பகவதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் பகவதியம்மனை வழிபட்டனர். இதில் சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று மதியம் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், அம்மன் வீதி உலாவும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அம்மன் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு
ஆம்பூர் அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.
2. ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் கோவில் தெப்பத்திருவிழா
ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றது.
3. தைப்பூச திருவிழாவையொட்டி குளித்தலையில், விடையாற்றி உற்சவம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
குளித்தலையில் தைப்பூச திருவிழாவையொட்டி விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
4. வடபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன்
சென்னை வடபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
5. பவுர்ணமி நிலவு ஒளியில் நடந்த மீனாட்சி-சுந்தரேசுவரர் தெப்ப திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பவுர்ணமி நிலவு ஒளியில் கோலாகலமாக நடந்த மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் தெப்ப திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.