மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், விதிகளை கடைபிடித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் - கலெக்டர் அறிவுரை + "||" + Officers operates local election, Follow the rules and carry out the tasks

உள்ளாட்சி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், விதிகளை கடைபிடித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் - கலெக்டர் அறிவுரை

உள்ளாட்சி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், விதிகளை கடைபிடித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் - கலெக்டர் அறிவுரை
உள்ளாட்சி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உரிய விதிகளை கடைபிடித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் ஜெயகாந்தன் கேட்டுக்கொண்டார்.
 சிவகங்கை,

சிவகங்கையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடா்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

மாநில தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, ஊரக உள்ளாட்சி தோ்தல் தொடா்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.

ஊரக உள்ளாட்சி தோ்தல் தொடா்பான பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி என அனைத்து பகுதிகளுக்கும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வேட்பாளா்கள் தொடா்பான விண்ணப்பப் படிவங்களின் விவரங்கள் மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம ஊராட்சி அலுவலகம், தோ்தல் தொடா்பான அலுவலகங்கள் ஆகியவற்றிலுள்ள விளம்பரப் பலகைகளில் வேட்பாளா்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு ஒட்ட வேண்டும்.

மேலும் அவ்வப்போது மாநில தோ்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் அறிக்கைகளையும் விளம்பரப் பலகையில் ஒட்ட வேண்டும். வேட்பு மனு பெறுதல், வேட்பு மனு திரும்பப் பெறுதல், வேட்பு மனு இறுதிப்பட்டியல் இறுதி செய்தல் போன்ற பணிகளின் போது மாநிலத் தோ்தல் ஆணைய அறிவுரைப்படி, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உரிய விதிகளை கடை பிடித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். வேட்பாளா்களுக்குரிய படிவங்கள் தேவையான அளவு இருப்பில் வைத்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தகூட்டத்தில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலா் அருண்மணி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனா் வடிவேல், வருவாய் கோட்டாட்சியா்கள் செல்வகுமாரி, சங்கரநாராணயணன், கலெக்டரின் நோ்முக உதவியாளா் லோகன், வட்டாட்சியர் காமராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ரூ.8 கோடியில் கிராம புறச்சாலை சீரமைப்பு பணி - கலெக்டர் தகவல்
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் 192 கிராம புறச்சாலை சீரமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
2. சாலை விதிகளை பின்பற்றி விபத்துகளை தவிர்க்க வேண்டும் - கலெக்டர் பேச்சு
சாலை விதிகளை பின்பற்றி விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.
3. சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல்பயிருக்கு காப்பீடு செய்ய 30-ந் தேதி கடைசி நாள் - கலெக்டர் தகவல்
சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல்பயிருக்கு காப்பீடு செய்ய 30-ந் தேதி கடைசி நாள் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
4. குளங்கள், ஊருணியை 2-வது கட்டமாக சீரமைக்க நடவடிக்கை - கலெக்டர் தகவல்
குளங்கள், ஊருணிகளை 2-வது கட்டமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
5. பாகனேரி அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்
பாகனேரியில் உள்ள அரசு பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் ஜெயகாந்தன் பரிசுகளை வழங்கினார்.