மாவட்ட செய்திகள்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது + "||" + In prison Languishing On the famous Rowdy The thug act went down

சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
புதுச்சேரி, 

புதுவை மடுவுப்பேட் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் (வயது 32). பிரபல ரவுடி. இவர் மீது மடுவுபேட் முரளி கொலை வழக்கு உள்பட 5 கொலை வழக்குகள், வெடிகுண்டு வழக்கு, தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தற்போது காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ரவுடி சுந்தரை கைது செய்ய லாஸ்பேட்டை போலீசார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்திருந்தனர். இதற்கிடையே சுந்தரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவிட்டார்.

அதையடுத்து லாஸ்பேட்டை போலீசார் காலாப்பட்டு சிறை அதிகாரிகளிடம் ரவுடி சுந்தரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவு ஆணையை வழங்கினார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...