பணி நிரந்தரம் செய்யக்கோரி, வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்கள் நூதன போராட்டம் - ரோட்டில் சமைத்து சாப்பிட்டனர் + "||" + Work Permanent Staff of the Agricultural Science Center The modern struggle
பணி நிரந்தரம் செய்யக்கோரி, வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்கள் நூதன போராட்டம் - ரோட்டில் சமைத்து சாப்பிட்டனர்
பணிநிரந்தரம் செய்யக்கோரி வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்கள் ரோட்டில் அடுப்பு வைத்து சமைத்து சாப்பிட்டனர்.
புதுச்சேரி,
புதுவை காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும், 64 மாதங்களுக்கான சம்பள நிலுவைத்தொகையில் கால்பகுதியை உடனடியாக வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்கள் கடந்த 2-ந்தேதி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள்.
நேற்று 3-வது நாளாக அவர்கள் புதுவை சட்டசபை அருகே தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
போராட்டத்தின்போது அவர்கள் ரோட்டில் கியாஸ் அடுப்பை பற்றவைத்து அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டனர். ஊழியர் களின் இந்த நூதன போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.