மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் சிவகிரி பகுதியில் வீடுகள் இடிந்து சேதம் + "||" + Sivagiri area houses damaged by continuous rain

தொடர் மழையால் சிவகிரி பகுதியில் வீடுகள் இடிந்து சேதம்

தொடர் மழையால் சிவகிரி பகுதியில் வீடுகள் இடிந்து சேதம்
தொடர் மழையால் சிவகிரி பகுதியில் வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.
சிவகிரி, 

சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் தேவிபட்டினம், ராயகிரி, விஸ்வநாதப்பேரி, வடுகப்பட்டி பகுதிகளில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில குளங்கள் நிரம்பியும், சில குளங்கள் நிரம்பும் தருவாயிலும் உள்ளன.

சிவகிரி அருகே ராயகிரி நேரு தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருக்கு சொந்தமான குடிசை வீட்டின் மண் சுவர்கள் மழையால் இடிந்து விழுந்தன. சிவராமலிங்கபுரம் தெற்கு தெருவை சேர்ந்த கணேசன், வடுகப்பட்டி மெயின்ரோட்டை சேர்ந்த கருப்பசாமி ஆகியோரின் ஓட்டு வீட்டின் சுவர்களும் இடிந்து விழுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த சிவகிரி தாசில்தார் கிரு‌‌ஷ்ணவேல், வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர்.

விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காமராஜர் நகர் அருகே சின்னசங்கரன்கோவில் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள பாலம் தற்போது பெய்த தொடர் மழையால் நேற்று உடைந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழியாக வேறு வாகனங்கள் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அப்பகுதி மக்கள் இந்த பகுதியில் கற்களை அடுக்கியும், முட்செடிகளை வெட்டி போட்டும் உள்ளனர். இந்த பாலத்தை அதிகாரிகள் உடனே சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தொடர் மழையால் நிரம்பி வரும் கண்மாய்கள் - பொதுமக்கள் மகிழ்ச்சி
திருவாடானை தாலுகாவில் தொடர் மழையால் கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2. சிவகங்கை, திருப்பத்தூர் பகுதிகளில், தொடர்மழையால் வீடுகள் சேதம் - சுவர் இடிந்து விழுந்து 3 பேர் காயம்
சிவகங்கை, திருப்பத்தூர் மற்றும் எஸ்.புதூர் பகுதிகளில் தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் காயமடைந்தனர்.
3. தமிழகத்தில் தொடர் மழை; 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் தொடர் மழையால் 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.
4. பாகூர் பகுதியில் தொடர் மழை: 300 வீடுகளில் தண்ணீர் புகுந்தது - நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது
பாகூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் 300 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.
5. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலி: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.