நெல் நாற்றுகளை வெள்ளம் அடித்துச்சென்றதால் விவசாயி அதிர்ச்சி சாவு - வல்லநாடு அருகே பரிதாபம்


நெல் நாற்றுகளை வெள்ளம் அடித்துச்சென்றதால் விவசாயி அதிர்ச்சி சாவு - வல்லநாடு அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 4 Dec 2019 11:00 PM GMT (Updated: 4 Dec 2019 8:07 PM GMT)

வல்லநாடு அருகே வயலில் நடப்பட்ட நெல் நாற்றுகளை வெள்ளம் அடித்து சென்றதால், விவசாயி அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

ஸ்ரீவைகுண்டம், 

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே முறப்பநாடு கோவில்பத்து பஞ்சாயத்து படுகையூரைச் சேர்ந்தவர் செல்லையா (வயது 62), விவசாயி. இவருடைய மனைவி பாப்பா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணமாகி விட்டது.

செல்லையாவுக்கு சொந்தமாக ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம், அங்குள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளது. சம்பவத்தன்று காலையில் செல்லையாவும், அவருடைய மனைவியும் தங்களது விவசாய நிலத்தில் நெல் நாற்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மாலையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் செல்லையாவின் விவசாய நிலத்திலும் வெள்ளம் புகுந்தது. இதனால் வயலில் நடப்பட்ட நெல் நாற்றுகளை வெள்ளம் அடித்துச்சென்றது. இதை பார்த்த செல்லையா, பாப்பா ஆகிய 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் செல்லையா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வல்லநாடு அருகே வயலில் நடப்பட்ட நெல் நாற்றுகளை வெள்ளம் அடித்து சென்றதால், விவசாயி அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story