இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது


இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Dec 2019 4:00 AM IST (Updated: 5 Dec 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

செங்குன்றம், 

விழுப்புரம் மாவட்டம் தேவனூர் ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி(வயது 26). இவர், சென்னை கொளத்தூர் அருகே தங்கி, அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அப்போது கொளத்தூரை சேர்ந்த சகுந்தலா(29) என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. சகுந்தலா, திருமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

புண்ணியமூர்த்தி, சகுந்தலாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறினார். இதையடுத்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி புண்ணியமூர்த்தி தனது சொந்த ஊருக்கு சென்றார். அப்போது அங்கு உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக தெரி கிறது. இதை அறிந்த சகுந்தலா, அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி அவர், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அதில், புண்ணியமூர்த்தி சகுந்தலாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது உறுதியானது.

இதையடுத்து புண்ணியமூர்த்தியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story