இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் மாதம் 6-ந் தேதியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கு முடிவுற்ற நிலையிலும், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீகுமார் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை செய்தனர். ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்தனர். ரெயில்நிலைய வளாகம் மற்றும் சரக்குகள் வைத்து உள்ள இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதேபோன்று தூத்துக்குடி பஸ்நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் ரோந்து அதிகரிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலையத்துக்கு வந்த அனைத்து பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்த பின்னரே போலீசார் அனுமதித்தனர். மேலும் ரெயில்வே பிளாட்பாரங்கள், தண்டவாளங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story