3-ம் ஆண்டு நினைவு நாள், ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி


3-ம் ஆண்டு நினைவு நாள், ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி
x
தினத்தந்தி 5 Dec 2019 10:30 PM GMT (Updated: 5 Dec 2019 7:58 PM GMT)

வாடிப்பட்டி உள்பட பல்வேறு பகுதியில் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

வாடிப்பட்டி,

வாடிப்பட்டியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், ஜெமினிபூங்கா, பஸ் நிலையம், சந்தைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரூர்செயலாளர் வெ.பாப்புரெட்டி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க தலைவர்கள் ராஜேஷ்கண்ணா, கார்த்திக், தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சோனை வரவேற்றார். இந்த நிகழ்ச்சிகளில் ஜெயலலிதா உருவ படத்திற்கு ஒன்றியசெயலாளர் செல்லப்பாண்டி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் நேரு, கோவிந்தசாமி, கூட்டுறவு சங்க துணைத்தலைவர் அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அலங்காநல்லூர் நேதாஜி நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா தலைமை தாங்கி ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் முன்னாள் கவுன்சிலர் சேதுசீனிவாசன், கூட்டுறவு சங்கதலைவர் பாலாஜி, சுப்பிரமணி, தாமரைரவி, முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரியில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில். அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது.

மேலூர் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் பாஸ்கரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் மேலூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் சாகுல் ஹமீது, அ.வல்லாளபட்டி பேரூர் கழக செயலாளர் மணிகண்டன் கலந்து கொண்டனர்.

மேலூர் தொகுதி அ.ம.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மேலூர் பேருந்து நிலையம் முன்பாக வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருப்பரங்குன்றத்தில் மதுரை கிழக்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

சோழவந்தான் கடைவீதியில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் சேர்மன் எம்.கே. முருகேசன், தலைமை கழக பேச்சாளர் பட்டணம் என்ற நைனாமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக ஜெயலலிதா உருவ படத்திற்கு நகர செயலாளர் சத்யபிரகாஷ், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி திரவியம் உள்பட அக்கட்சியினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள உரப்பனூர், செக்கானூரணி, கரடிக்கல், கிழவனேரி, நடுவக்கோட்டை உள்பட 38 ஊராட்சிகளிலும் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட எம். ்ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி, கூட்டுறவு சங்கத்தலைவர் முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள 27 வார்டுகளிலும் நகர செயலாளர் விஜயன், ஜாஹாங்கீர், சதீஸ்சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

கள்ளிக்குடி ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் மகாலிங்கம் தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Next Story