அரிமளம், ஆவுடையார்கோவில், ஆலங்குடியில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை


அரிமளம், ஆவுடையார்கோவில், ஆலங்குடியில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 6 Dec 2019 4:15 AM IST (Updated: 6 Dec 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

அரிமளம், ஆவுடையார்கோவில், ஆலங்குடியில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரிமளம்,

அரிமளம் ஒன்றியத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நமணசமுத்திரத்தில் அரிமளம் ஒன்றிய செயலாளர் கடையக்குடி திலகர் தலைமையில், அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினார்கள். அரிமளம் பேரூராட்சியில் நகர செயலாளர் சி.கே. மாரியப்பன் தலைமையில், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதேபோல் லெணாவிளக்கு, கடியாப்பட்டி, கே.புதுப்பட்டி, கீழாநிலைகோட்டை, கல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ஆவுடையார்கோவில்

ஆவுடையார்கோவில் கடை விதியில் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு ஆவுடையார்கோவில் ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் கூத்தையா தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆலங்குடி

ஆலங்குடி பேரூராட்சி வடகாடு முக்கத்தில் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அ.தி.மு.க. நகர செயலாளர் பழனிவேல் தலைமையில், கட்சியினர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து கலைஞர் சாலை வழியாக ஆலங்குடி சந்தைப்பேட்டை வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆலங்குடி நகரத்திற்குட்பட்ட முன்னாள் தலைவர்கள், பேரூர் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story