தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பொது அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பொது அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஆலங்குடி கிராம நிர்வாக அதிகாரி உலகநாதன் பணியிடமாறுதலை திரும்பப்பெற வேண்டும். புதுக்கோட்டை வடக்கு வட்டத்திற்கு புதியதாக நியமிக்கப்பட்ட கிராம நிர்வாக அதிகாரியிடம் கணக்கை ஒப்படைக்காததை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story