பி.எம்.சி. வங்கியை மகாராஸ்டிரா கூட்டுறவு வங்கியுடன் இணைக்க பரிந்துரை மந்திரி ஜெயந்த் பாட்டீல் பேட்டி


பி.எம்.சி. வங்கியை மகாராஸ்டிரா கூட்டுறவு வங்கியுடன் இணைக்க பரிந்துரை மந்திரி ஜெயந்த் பாட்டீல் பேட்டி
x
தினத்தந்தி 6 Dec 2019 4:30 AM IST (Updated: 6 Dec 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

பி.எம்.சி. வங்கியை மகாராஸ்டிரா கூட்டுறவு வங்கியுடன் இணைக்க மாநில அரசு பரிந்துரை செய்து இருப்பதாக மந்திரி ஜெயந்த் பாட்டீல் கூறினார்.

மும்பை, 

பி.எம்.சி. வங்கியை மகாராஸ்டிரா கூட்டுறவு வங்கியுடன் இணைக்க மாநில அரசு பரிந்துரை செய்து இருப்பதாக மந்திரி ஜெயந்த் பாட்டீல் கூறினார்.

பி.எம்.சி. வங்கி

மும்பையை தலைமையிடமாக கொண்டு பஞ்சாப் மகாராஸ்டிரா கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ரூ.4 ஆயிரத்து 355 கோடி முறைகேடு நடந்ததாக கூறி, கடந்த செப்டம்பர் 23-ந் தேதி அதன் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி முடக்கியது. இதனால் டெபாசிட் செய்த தொகையை திரும்ப பெற முடியாமல் பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் 8 ேபர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். மேலும் லட்சக்கணக்கான பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த தொகையை திரும்ப பெற முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

மகாராஸ்டிரா வங்கியுடன் இணைப்பு

இந்தநிலையில் பி.எம்.சி. வங்கியை மகாராஸ்டிரா மாநில கூட்டுறவு வங்கியுடன் இணைக்க மாநில அரசு பரிந்துரை செய்து உள்ளது.

இது குறித்து மாநில மந்திரி ஜெயந்த் பாட்டீல் கூறியதாவது:-

நான் நேற்று முன்தினம் மகாராஸ்டிரா கூட்டுறவு வங்கி சேர்மனிடம் பேசினேன். பி.எம்.சி. வங்கியை மகாராஸ்டிரா வங்கியுடன் இணைக்க முயற்சி செய்யுமாறு பரிந்துரை செய்து உள்ளோம். தேவைப்பட்டால் இது தொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் பரிந்துரை செய்வோம். இதன் மூலம் பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்களுடன் அரசு உள்ளது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்.

2 வங்கிகளையும் இணைப்பதன் மூலம் சிறிய தொகையை டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் நிச்சயமாக பயன் அடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story