ஸ்ரீபெரும்புதூரில் போலீசை தாக்க முயன்ற 3 பேர் கைது


ஸ்ரீபெரும்புதூரில் போலீசை தாக்க முயன்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 Dec 2019 3:30 AM IST (Updated: 7 Dec 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூரில் போலீசை தாக்க முயன்ற அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 40). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு பாலசுப்பிரமணி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி லாரியை ஓட்டி சென்றார். அப்போது ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே சென்ற போது முன்னால் சென்ற ஜீப் மீது லாரி மோதியது.

ஜீப்பில் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த சகோதரர்களான கார்த்திக் ராஜா (24), சத்தியநாராயணன் (22) இருந்தனர். ஜீப் டிரைவராக கோகுல்கண்ணன் (35) இருந்தார். ஜீப்பில் மோதியதற்காக அவர்கள் லாரி டிரைவர் பாலசுப்பிரமணியை நடுரோட்டில் ஆடையை கலைத்து முட்டி போடவைத்து சரமாரியாக தாக்கினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்த வழியாக ரோந்து பணியில் வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் தனது வாகனத்தின் டிரைவரான போலீஸ்காரர் முருகனை சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். அவர் லாரி டிரைவரை தாக்குவதை பார்த்து தடுக்க சென்றார். அப்போது அவர்கள் 3 பேரும் போலீஸ்காரர் முருகனை தகாத வார்த்தையில் பேசி தாக்க முயன்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியநாராயணன், கார்த்திக்ராஜா, கோகுல்கண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.

Next Story