கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் - கலெக்டரிடம், தி.மு.க. மனு
மதுரை நகரில் கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று தி.மு.க.வினர் மனு அளித்தனர்.
மதுரை,
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கோ.தளபதி, வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க.வினர் மதுரை கலெக்டர் வினய்யிடம் நேற்று மனு ஒன்று கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மறைந்த தி.மு.க. தலைவரும், 5 முறை தமிழகத்தில் முதல்-அமைச்சராக இருந்தவருமான கருணாநிதிக்கு மதுரையில் சிலை அமைப்பது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ந் தேதி மனு அளித்து இருந்தோம்.
ஆனால் இதுவரை எந்த பதிலும் அளிக்க வில்லை. எனவே அதனை மீண்டும் நினைவுப்படுத்தும் விதமாக இந்த மனுவை அளிக்கிறோம். கருணாநிதிக்கு மதுரை-சிவகங்கை சாலையில் கே.கே.நகர் பால்பண்ணை அருகில் உள்ள சந்திப்பு அல்லது பழங்காநத்தம்-திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலை ரவுண்டானா சந்திப்பு ஆகிய 2 இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் சிலை வைக்க அனுமதிக்க வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story