ராஜபாளையத்தில் கோவில் உண்டியலை உடைத்து நகை-பணம் கொள்ளை
ராஜபாளைத்தில் கோவில் உண்டியலை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம்-மதுரை சாலையில் மாயூரநாதர் சாமி கோவில் முன்பு ஆதிவிநாயகர் கோவில் அமைந்துள்ளது. நேற்று காலையில் சோமசுந்தரம் என்பவர் பூஜை செய்வதற்காக வந்து பார்த்தபோது, கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இவரது தகவலின் பேரில் போலீசார் வந்து பார்த்தனர். அப்போது, உண்டியலோடு இணைத்து வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை மணியை துண்டித்து, உண்டியல் காணிக்கை ரூ.15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணம் மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராைவ போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர், கோடு போட்ட சட்டை மற்றும் கைலி அணிந்தவாறு, கோவிலுக்குள் புகுந்து உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தை திருடும் காட்சி பதிவாகி உள்ளது. இந்த காட்சியில் பதிவாகி உள்ள திருடனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ேபாலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story