அருப்புக்கோட்டையில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி


அருப்புக்கோட்டையில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி
x
தினத்தந்தி 7 Dec 2019 4:30 AM IST (Updated: 7 Dec 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை காந்தி மைதானம் பகுதியில் உள்ள நந்தவனத் தெருவைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது மகள் விதாஷினி (வயது19). இவர் மதுரை அரசு கல்லூரியில் படித்து வந்தார்.

இந்த நிலையில் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த விதாஷினி கடந்த 4-ந்தேதி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக அந்தப் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார துறையினருக்கு வலியுறுத்தப்பட்டு உள்ளது.
1 More update

Next Story