திருக்கோவிலூர் அருகே, விவசாயி படுகொலை


திருக்கோவிலூர் அருகே, விவசாயி படுகொலை
x
தினத்தந்தி 7 Dec 2019 4:00 AM IST (Updated: 7 Dec 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே விவசாயி படுகொலை செய்யப்பட்டார்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலபந்தல் காலனியை சேர்ந்த கோபால் என்பவரது மகன் ஏழுமலை(வயது47), விவசாயி. இவரது தம்பி கோவிந்தராஜ்(41). இவருக்கு திருமணமாகவில்லை. இதனால் அவர் தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி தனது அண்ணன் ஏழுமலையிடம் அடிக்கடிதகராறு செய்வது வழக்கமாம்.

கடந்த 3-ந்தேதி இரவில் கோவிந்தராஜ் தனது அண்ணனிடம், அம்மாவை நான் மட்டும் தான் கவனிக்கிறேன், நீ கவனிக்கவில்லை எனக்கூறி தகராறு செய்து அவ ரை அடித்து கீழே தள்ளியுள்ளார். கீழே விழுந்த ஏழுமலையின் வயிற்றில் கருங்கல்லை தூக்கிப்போட்டு உள்ளார். இதனால் வலி தாங்காமல் ஏழுமலை அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி நாகம்மாள் மற்றும் மகன்கள் ஓடிவரவே கோவிந்தராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதில் பலத்த காயம் அடைந்த ஏழுமலையை திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக செத்தார்.

இது தொடர்பாக திருப்பாலபந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story