ஜெயங்கொண்டத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது


ஜெயங்கொண்டத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 Dec 2019 11:00 PM GMT (Updated: 7 Dec 2019 3:58 PM GMT)

ஜெயங்கொண்டத்தில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமே‌‌ஷ்பாபு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ஜெயங்கொண்டம் பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அங்கு சென்று சோதனையிட்டனர்.அப்போது ஜெயங்கொண்டம் சீனிவாசநகரை சேர்ந்த பாலு மகன் ஹரிஹரன் (வயது 20), கன்னிகோவில் தெருவை சேர்ந்த சேகர் மகன் மணிகண்டபிரபு (21), குழுமூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் மகன் மதுரைவீரன் (31) ஆகியோர் 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து போலீசார், கஞ்சா வைத்திருந்த ஹரிஹரன், மணிகண்டபிரபு, மதுரைவீரன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்ட 3 பேரையும் ஜெயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை திருச்சி மத்திய சிறையில் 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் சக்திவேல் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story