மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து ஓய்வுபெற்ற துணை தாசில்தாரிடம் ரூ.1¼ லட்சம் நூதன திருட்டு + "||" + ATM. Theft of Rs.1.5 lakh to a retired deputy who replaced the card

ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து ஓய்வுபெற்ற துணை தாசில்தாரிடம் ரூ.1¼ லட்சம் நூதன திருட்டு

ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து ஓய்வுபெற்ற துணை தாசில்தாரிடம் ரூ.1¼ லட்சம் நூதன திருட்டு
ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து ஓய்வுபெற்ற துணை தாசில்தாரிடம் ரூ.1¼ லட்சம் நூதன திருட்டில் ஈடுபட்ட டிப்-டாப் பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 62). இவர் ஜெயங்கொண்டத்தில் துணை தாசில்தாராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தற்காலிக பணியில் இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் அருகில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்தில் தனது ஏ.டி.எம். கார்டை பயன் படுத்தி ரூ.5 ஆயிரம் எடுத்துள்ளார். பின்னர் பணம் எடுத்ததற்கான ரசீதை பெறுவதற்காக அதே இடத்தில் நின்றுள்ளார்.


அப்போது பின்னால் நின்ற ஒரு டிப்-டாப் பெண், தான் பணம் எடுக்கப்போவதாக பழனிசாமியிடம் கூறி, அவரை நகர சொல்லிவிட்டு அவரது கார்டை எந்திரத்தில் இருந்து எடுத்து கொடுப்பதுபோல், தான் வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை பழனிசாமியிடம் கொடுத்துவிட்டு, பழனிசாமியின் ஏ.டி.எம். கார்டை அந்த பெண் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார்.

திருட்டு

சில மணி நேரத்தில் பழனிசாமியின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில், ரூ.1 லட்சத்திற்கு நகை எடுத்ததாகவும், ஏ.டி.எம். மையத்தில் ரூ.35 ஆயிரம் எடுத்ததாகவும் இருந்தது. இதையடுத்து பழனிசாமி உடனே தனது வங்கிக்கு சென்று தனது ஏ.டி.எம். கார்டின் கணக்கை முடக்கி வைக்க கூறியுள்ளார். அதன்பின்னர் தனது ஏ.டி.எம். கார்டை சரி பார்த்துள்ளார்.

அப்போது அதில் வைத்திலிங்கம் என்ற பெயர் இருந்தது. இதையடுத்து பழனிசாமி கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி நூதன முறையில் பணத்தை திருடிய பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. எசனையில் அடுத்தடுத்து 7 வீடுகளில் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
எசனை கிராமத்தில் அடுத்தடுத்து 7 வீடுகளில் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. மன்னார்குடியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
மன்னார்குடியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 12 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3. ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 15½ பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
பெரம்பலூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 15½ பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் 16 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு
தலைவாசல் அருகே ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து, 16 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை
உளுந்தூர்பேட்டை அருகே முத்துமாரியம்மன் கோவிலில் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றனர்.