மாவட்ட செய்திகள்

சேதுபாவாசத்திரம் அருகே வேன்-கார் மோதல்; கணவன்-மனைவி பலி மேலும் 9 பேர் காயம் + "||" + Van-car collision near Sethupavasatram; Husband-wife killed and 9 others injured

சேதுபாவாசத்திரம் அருகே வேன்-கார் மோதல்; கணவன்-மனைவி பலி மேலும் 9 பேர் காயம்

சேதுபாவாசத்திரம் அருகே வேன்-கார் மோதல்; கணவன்-மனைவி பலி மேலும் 9 பேர் காயம்
சேதுபாவாசத்திரம் அருகே வேன்-கார் மோதிக்கொண்டதில் கணவன்-மனைவி பலியானார்கள். மேலும் 9 பேர் காயம் அடைந்தனர்.
சேதுபாவாசத்திரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஓலத்தண்ணி பகுதியை சேர்ந்தவர் சுதி(வயது 46). இவர், தனது மனைவி சைனி(35) மற்றும் மகன்கள் நவீன்(17), நிவீன்(15) ஆகியோருடன் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்துக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஒரு காரில் சென்றார். காரை அவரே ஒட்டினார்.


அந்த கார், தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தை அடுத்த காரங்குடா அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் நிலைதடுமாறிய கார், எதிரே பட்டுக்கோட்டையில் இருந்து மீமிசல் நோக்கி வந்துகொண்டிருந்த வேன் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கணவன்-மனைவி உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

கணவன்-மனைவி பலி; 9 பேர் காயம்

உடனடியாக அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதி அவரது மனைவி சைனி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது மகன்கள் இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் வேனில் பயணம் செய்த டிரைவர் மணி உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் கொரோனாவுக்கு புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி தென்காசியில் 93 பேருக்கு தொற்று
நெல்லையில் கொரோனாவுக்கு புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியானார்கள். தென்காசியில் 93 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
2. நெல்லையில் கொரோனாவுக்கு புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி தென்காசியில் 93 பேருக்கு தொற்று
நெல்லையில் கொரோனாவுக்கு புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியானார்கள். தென்காசியில் 93 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
3. மும்பையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது
மும்பையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது.
4. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பலி 100-ஐ கடந்தது இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்
புதுச்சேரியில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. புதிதாக 305 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
5. மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 413 பேர் பலி
மராட்டியத்தில் புதிய உச்சமாக கொரோனாவுக்கு ஒரே நாளில் 413 பேர் பலியாகி உள்ளனர்.