தூத்துக்குடியில் பொதுமக்கள் சாலை மறியல் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற கோரிக்கை
தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியிலும் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் தூத்துக்குடி சிதம்பரநகர் 4-வது தெருவில் உள்ள ஆட்டோ காலனி குடியிருப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழைநீர் தேங்கி இருப்பதால் சுகாதார கேடு ஏற்படுவதாகவும், அந்த தண்ணீரை உடனடியாக அகற்ற கோரியும் அந்த பகுதி மக்கள் நேற்று காலையில் சிதம்பரநகர் மெயின் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பழனிகுமார், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story