மாவட்ட செய்திகள்

பர்கூரில் மர்ம காய்ச்சலுக்கு 2 வயது பெண் குழந்தை பலி + "||" + 2-year-old girl dies of mystery fever

பர்கூரில் மர்ம காய்ச்சலுக்கு 2 வயது பெண் குழந்தை பலி

பர்கூரில் மர்ம காய்ச்சலுக்கு 2 வயது பெண் குழந்தை பலி
பர்கூரில் மர்ம காய்ச்சலுக்கு 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
பர்கூர்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள சின்ன மல்லப்பாடியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி பிரியங்கா. இவர்களுக்கு 2 வயதில் ரி‌‌ஷ்வந்திகா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக குழந்தை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாள்.


இதன் காரணமாக குழந்தையை கிரு‌‌ஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பெற்றோர் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் ரி‌‌ஷ்வந்திகாவுக்கு காய்ச்சல் குணமாகவில்லை.

பரிதாப சாவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குழந்தைக்கு காய்ச்சல் அதிகமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர் குழந்தையை கிரு‌‌ஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ரி‌‌ஷ்வந்திகாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை ரி‌‌ஷ்வந்திகா நேற்று பரிதாபமாக இறந்தாள். மர்ம காய்ச்சலுக்கு 2 வயது பெண் குழந்தை பலியான சம்பவம் சின்னமல்லப்பாடி பகுதி மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் பார்வையாளர் பலி; 25 பேர் காயம்
அன்னவாசல் அருகே வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 25 பேர் காயமடைந்தனர்.
2. நாமகிரிப்பேட்டையில் மின்சாரம் தாக்கி பெண் பலி
நாமகிரிப்பேட்டையில் மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
3. கார் மோதி தனியார் தொழிற்சாலை ஊழியர் பலி
பெரம்பலூர் புறநகர், துறைமங்கலம் நான்குசாலை சந்திப்பு அருகே உள்ள சிலோன் காலனியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் முத்துகுமார்(வயது 39).
4. ஜேடர்பாளையம் படுகையணை ராஜா வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி
ஜேடர்பாளையம் படுகையணை பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலியானார்.
5. தஞ்சையில், பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்தது: 4 பெண்கள் உடல் நசுங்கி பலி 5 பேர் படுகாயம்
தஞ்சையில், பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் 4 பெண்கள் உடல் நசுங்கி இறந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.