வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் 12, 13-ந் தேதிகளில் தமிழகத்துக்கு வந்து சேரும் அமைச்சர் தகவல்


வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் 12, 13-ந் தேதிகளில் தமிழகத்துக்கு வந்து சேரும் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 8 Dec 2019 11:00 PM GMT (Updated: 8 Dec 2019 6:17 PM GMT)

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் 12, 13-ந் தேதிகளில் தமிழகத்துக்கு வந்து சேரும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

தஞ்சாவூர்,

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் இழுபறி இல்லை. அ.தி.மு.க. தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறது.

தி.மு.க. தான் தேர்தலை எப்படியாவது ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்துக்கு சென்றது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் மிகப்பெரிய வெற்றியை பெறும்.

விலை உயர்வு

வெங்காயம் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் கூடுதலாக பெய்த மழையே ஆகும். இதனால் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டது. வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் தமிழகத்தில் விலை ஏற்றம் இருக்கிறது. இந்த பிரச்சினை இன்னும் சில வாரங்களில் சரியாகிவிடும். மத்தியஅரசு அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வெங்காயத்தை இறக்குமதி செய்கிறது. இவற்றை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளையும் மத்தியஅரசு எடுத்து வருகிறது.

1 லட்சம் டன்

துருக்கி, எகிப்து போன்ற நாடுகளில் இருந்து 1 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைத்து வினியோகம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை மத்தியஅரசு மேற்கொண்டு வருகிறது. நம் மாநிலத்துக்கு தேவையான வெங்காயத்தை நாம் மத்தியஅரசிடம் இருந்து பெற்று ஏறத்தாழ 6 ஆயிரம் ரே‌‌ஷன் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கைகளை தொடங்கிவிட்டோம். துருக்கி, எகிப்தில் இருந்து வரக்கூடிய வெங்காயம் வருகிற 12, 13-ந் தேதிகளில் தமிழகத்துக்கு வந்து சேரும். அதன்பிறகு வினியோகத்தை அரசு தொடங்கும். இவ்வாறு அவர்கூறினார்.


Next Story