ஆர்.கே.பேட்டை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சாவு - அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது பரிதாபம்
ஆர்.கே.பேட்டை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே. பேட்டை அருகே ஆனந்தவள்ளிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி ( வயது 50). விவசாயி. இவர் நேற்று தனது வயலுக்கு நடந்து சென்றார். அப்போது வயலில் உயர் அழுத்த மின்கம்பி ஒன்று அறுந்து கிடந்தது.
துரைசாமி அதை கவனிக்காமல் மிதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்தனர். தகவல் கிடைத்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துரைசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சாரம் தாக்கி இறந்த துரைசாமிக்கு சம்பூர்ணம் (48) என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story