திருமணம் செய்வதாக கூறி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
திருமணம் செய்வதாக கூறி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம்,
திருவண்ணாமலை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள இருளர் காலனி பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (வயது 20). இவருக்கும் சேலத்தை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவருக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பிரதீப் மாணவியை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதையொட்டி பிரதீப் திருவண்ணாமலையில் இருந்து சேலத்திற்கு வந்து உள்ளார். அப்போது சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருவரும் நேரில் சந்தித்துக்கொண்டனர்.
பின்னர் மாணவியை சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்து சென்று உள்ளார். அப்போது கோவிலில் வைத்து மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். பின்னர் அவரை சேலம் கிச்சிப்பாளையத்தில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டுக்கு அழைத்து சென்று உள்ளார்.
அங்கு வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். அதன் பிறகு அடிக்கடி 2 பேரும் சந்தித்து தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் மாணவியை திருமணம் செய்ய, பிரதீப் மறுத்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கிய பிரதீப்பை கைது செய்தனர்.
Related Tags :
Next Story