களுத்தரிக்கப்பட்டி, வெடிக்காரன்பட்டி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


களுத்தரிக்கப்பட்டி, வெடிக்காரன்பட்டி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 9 Dec 2019 4:00 AM IST (Updated: 9 Dec 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

களுத்தரிக்கப்பட்டி, வெடிக்காரன்பட்டியில் உள்ள அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தரகம்பட்டி,

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள களுத் தரிக்கப்பட்டியில் புதிதாக முத்தாலம்மன் கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் வளாகத்திலேயே புதிதாக பகவதியம்மனுக்கு சன்னதி அமைக்கப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றிற்கு சென்று புனிதநீரை எடுத்து வந்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் முதல்காலபூஜை, இரண்டாம் காலபூஜை, மூன்றாம் காலபூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து நேற்று காலை சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் முத்தாலம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பகவதியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர்முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

வெள்ளியணை

வெள்ளியணை அருகே உள்ள வெடிக்காரன்பட்டியில் பிரசித்திபெற்ற பெரியக்காண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஊர்பொதுமக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முதல்கால பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை இரண்டாம் கால பூஜை மற்றும் கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் புனிதநீரை சிவாச் சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

தொடர்ந்து கோவிலில் உள்ள தங்காயி அம்மன், கன்னிமார், பொன்னர் சங்கர், மகாமுனி, கருப்பண்ணசாமி, மதுரைவீரன், வீரபாகு ஆகிய சாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர் களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.



Next Story