விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி திருக்காட்டுப்பள்ளியில், மாரத்தான் ஓட்டம்
விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி திருக்காட்டுப்பள்ளியில், மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
திருக்காட்டுப்பள்ளி,
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கல்லணை சாலையில் சுக்காம்பார் கிராமம் உள்ளது. இந்த கிராம இளைஞர்கள் சார்பில் விவசாயத்தை வளர்ப்போம், விவசாயத்தை காப்போம் என வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளைஞர்களும், இளம் பெண்களும் சுக்காம்பார் கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் குவிந்தனர். இளைஞர்கள், இளம்பெண்களுக்கு இரண்டு பிரிவாக போட்டி நடத்தப்பட்டது. கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் இருந்து மாரத்தான் ஓட்டத்தை சுக்காம்பார் பங்குத்தந்தை மரியதாஸ் தொடங்கி வைத்தார்.
பரிசு
இளைஞர்களுக்கான பிரிவில் திருநெல்வேலியை சேர்ந்த சந்துரு என்பவர் முதல் பரிசையும், திருவையாறு பிரகதீஸ்வரன் இரண்டாம் பரிசையும், திண்டுக்கல் கார்த்திக் மூன்றாம் பரிசையும் பெற்றனர். பெண்களுக்கான பிரிவில் திருச்சி ஜோதி முதல் பரிசையும், வடசேரி யுகா இரண்டாம் பரிசையும், பெரம்பலூர் கிருத்திகா மூன்றாம் பரிசையும் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை சுக்காம்பார் கிராம இளைஞர்கள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story