மணிமுத்தாறில் அட்டகாசம் செய்த சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது


மணிமுத்தாறில் அட்டகாசம் செய்த சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 9 Dec 2019 4:00 AM IST (Updated: 9 Dec 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

மணிமுத்தாறில் அட்டகாசம் செய்த சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது.

அம்பை, 

மணிமுத்தாறில் அட்டகாசம் செய்த சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது.

சிறுத்தை அட்டகாசம்

நெல்லை மாவட்டம் களக்காடு-முண்டந்துறை வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது மணிமுத்தாறு. இங்கு வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு மணிமுத்தாறு அண்ணாநகர் குடியிருப்பை சேர்ந்த ராமர் (வயது 55) என்பவருக்கு சொந்தமான ஆட்டை சிறுத்தை கடித்து கொன்று அட்டகாசம் செய்தது.

இதுகுறித்து ராமர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இதில் சிறுத்தை வந்து சென்றது தெரியவந்தது.

கூண்டு வைக்கப்பட்டது

இதையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அந்த பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் சிறுத்தையை பிடிக்க அம்பை வனச்சரகர் கார்த்திகேயன், வனச்சரக அலுவலர் முருகேசன், வனவர் சக்திவேல் மற்றும் வனத்துறையினர் அங்கு பெரிய இரும்பு கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story