உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு நீண்ட காலம் நீடிக்காது நாராயண் ரானே பேட்டி
மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு நீண்ட காலம் நீடிக்காது என நாராயண் ரானே கூறினார்.
மும்பை,
மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு நீண்ட காலம் நீடிக்காது என நாராயண் ரானே கூறினார்.
நாராயண் ரானே
சிந்துதுர்க்கில் பாரதீய ஜனதா தலைவர் நாராயண் ரானே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மராட்டியத்தில் தங்களது தனிப்பட்ட நலன்களை பாதுகாத்து கொள்வதற்காகவே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைத்து உள்ளன. இந்த ஆட்சி நீண்ட காலத்துக்கு நீடிக்காது.
ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததில் இருந்து உத்தவ் தாக்கரே மும்பை - ஆமதாபாத் இடையிலான புல்லட் ரெயில் திட்டம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை மறுஆய்வு செய்யவும், ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கும் பணிக்கு தடையும் தான் விதித்து உள்ளார்.
மாநிலத்துக்கு நல்லதல்ல
இந்த அரசாங்கம் பதவி ஏற்று 10 நாட்கள் கடந்து விட்டன. ஆனால் மந்திரிகள் யாருக்கும் இன்னும் இலாகா ஒதுக்கப்படவில்லை. இதுவரை மக்களின் நலனுக்கான எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த அரசாங்கம் மாநிலத்துக்கு நல்லதல்ல. உத்தவ் தாக்கரேக்கு அதிகாரத்தை பற்றிய புரிதல் இல்லை. அவர் முதல்-மந்திரி பதவிக்கு அனுபவம் இல்லாதவர்.
இந்த அரசாங்கத்தின் செயல்பாட்டை பார்க்கும் போது மாநிலத்தின் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story