அ.தி.மு.க. முழு பலத்துடன் தேர்தலை சந்திக்க தயார் அமைச்சர் காமராஜ் பேட்டி


அ.தி.மு.க. முழு பலத்துடன் தேர்தலை சந்திக்க தயார் அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 9 Dec 2019 11:00 PM GMT (Updated: 9 Dec 2019 7:01 PM GMT)

அ.தி.மு.க. முழு பலத்துடன் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

வலங்கைமான்,

வலங்கைமானை அடுத்த ஆவூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாற்றுக்கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வழிகாட்டுதலின் படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் மாற்று கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர்.

அ.தி.மு.க. வெற்றி பெறும்

அ.தி.மு.க.வின் பலத்தை கண்டு தி.மு.க. அஞ்சி வருவது மு.க.ஸ்டாலின் பேச்சில் இருந்து தெரிகிறது. அ.தி.மு.க. தேர்தலை கண்டு எந்த காலத்திலும் பயந்ததில்லை. உள்ளாட்சி ேதா்தல் என்றாலும் சரி, வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தல் ஆனாலும் சரி அ.தி.மு.க.வே தமிழகத்தில் என்றும் வெற்றி பெறும்.

தேர்தல் ஆணையம் அனைத்து விதிமுறைகளையும், அனைத்து தரப்பையும் கலந்து ஆலோசித்து தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி தேர்தல் தேதியை விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். எனவே அ.தி.மு.க. முழு பலத்துடன் தேர்தலை சந்திக்க தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மேற்கு ஒன்றிய செயலாளர் சங்கர், துணைச்செயலாளர் பிரபாகரன், கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர் இளவரசன், மாவட்ட இளைஞர் அணி இணைச்செயலாளர் ஜெயஇளங்கோவன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story