குண்டும்- குழியுமாக காணப்படும் பேராவூரணி முதன்மை சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
குண்டும்- குழியுமாக காணப்படும் பேராவூரணி முதன்மை சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பேராவூரணி,
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் உள்ள முதன்மை சாலை பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி வரை செல்லும் சாலை ஆகும்.
பேராவூரணிக்கு வரும் வாகனங்கள் இந்த சாலையை கடக்காமல் எந்த பகுதிக்கும் செல்ல முடியாது. மக்கள் பயன்பாட்டில் முக்கிய இடம் வகிக்கும் இந்த சாலை கடந்த 15 நாட்களாக இப்பகுதியில் பெய்த மழை காரணமாக மிகவும் சேதமடைந்து குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இரவில் இந்த சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தை கவனிக்க முடியாமல் கீழே விழுந்து காயமடைகிறார்கள்.
சீரமைக்க கோரிக்கை
இதைப்போல பேராவூரணி அரசு மருத்துவமனையில் இருந்து தொடங்கி பொதுப்பணித்துறை அலுவலகம் அருகிலும், பேராவூரணி ரெயில்வே நிலையம் அருகிலும், பேராவூரணி ஸ்டேட் பாங்க் அருகிலும், பேராவூரணி பஸ் நிலையம் அருகிலும் சாலை சேதமடைந்து குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைவாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story