காரமடை ரெயில்வே மேம்பாலத்தில், சர்வீஸ் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் மும்முரம்


காரமடை ரெயில்வே மேம்பாலத்தில், சர்வீஸ் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 9 Dec 2019 10:15 PM GMT (Updated: 9 Dec 2019 8:30 PM GMT)

காரமடை ரெயில்வே மேம்பாலத்தில்,சர்வீஸ் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதையொட்டி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

காரமடை, 

நீலகிரி மாவட்டம் மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்துகோவை செல்லும்வாகனங்கள்காரமடைவழியாக சென்றுவருகின்றன. இதில்காரமடைரெயில்வேதண்டவாள பகுதியில்அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால்இப்பகுதியில்ரெயில்வேமேம்பாலம் அமைக்க பல்வேறுதரப்பினர் கோரிக்கைவிடுத்து வந்தனர்.

இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டுரெயில்வேதுறை மற்றும்நெடுஞ்சாலைத்துறைசார்பில்ரூ.33கோடி செலவில்மேம்பாலம் கட்டப்பட்டு 2018-ம்ஆண்டு போக்குவரத்துக்காகதிறக்கப்பட்டது.

இந்த நிலையில்மேம்பால பணிமட்டுமே முடிந்த நிலையில் மேம்பாலத்தின்இருபுறமும்சர்வீஸ்சாலை அமைக்க நில ஆர்ஜிதம் செய்யவேண்டியிருந்தது. சில நில உரிமையாளர்கள் கட்டிடங்களை அகற்றி இடத்தை ஒப்படைத்தனர். இந்த இடத்தில் 5 மீட்டர் அகலத்தில்சர்வீஸ்சாலை அமைக்க பணிகள் நடைபெற்று வந்தது. இதில் ஒரு சில கடை உரிமையாளர்களுக்கு வாரிசு மற்றும் பட்டா உள்ளிட்ட போதிய ஆவணங்கள் இல்லாததால், நிலம் கையகப்படுத்தும் பணிகளில்காலதாமதம்ஏற்பட்டது.

இதற்கிடையேகாரமடைநகர பகுதியில்போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும்அவதிக்குள்ளாகிவருகின்றனர். எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கைஎடுத்து சாலையைஅகலப்படுத்தி,சர்வீஸ்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கடந்த 10நாட்களுக்குமுன்புவருவாய்த்துறைமூலம் நிலஉரிமையாளர்களுக்கு தானாககடைகளை அகற்ற அறிவிப்புவிடுக்கப்பட்டது. ஆனால் ஒரு சில கடைகள்அகற்றப்படவில்லை. இந்த நிலையில் கோட்டாட்சியர்சுரேஷ்குமார்தலைமையில் தாசில்தார்சாந்தாமணி,மின்வாரியஊழியர்கள்,நெடுஞ்சாலை துறையினர்பொக்லைன்எந்திரம் மூலம் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து கோட்டாட்சியர்சுரேஷ்குமார்கூறியதாவது:-

காரமடைமேம்பாலத்தின்இருபுறங்களிலும்சர்வீஸ்சாலை மற்றும்கழிவுநீர் கால்வாய்அமைக்கதிட்டமிடப்பட்டுள்ளது. இதில் சில நிலஉரிமையாளர்களுக்கு போதியஆவணம் இல்லாதது,வாரிசு சான்றிதழ்மற்றும் நீதிமன்ற வழக்குகள்இருந்ததாலும், நிலத்தைகையகப்படுத்துவதற்குகாலதாமதம்ஏற்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்குஆவணங்களை தயார்செய்துஅவர்களுக்கு தேவையானநிலம் மதிப்பீடு தொகையும் கொடுக்க நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது. நிலம்கையகப்படுத்துவதற்காக14 கட்டிடங்கள்பொக்லைன்எந்திரம் மூலம் இடித்துஅகற்றப்படும்.இந்த பணிகள்தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. பின்னர்சர்வீஸ்சாலை அமைக்கநெடுஞ்சாலைத்துறைக்குஇடம்ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்துநெடுஞ்சாலை துறைஅதிகாரிகள்கூறுகையில், வருகிற ஜனவரிமாதத்திற்குள்காரமடைரெயில்வே மேம்பாலத்தின்இருபுறமும்5 அடி அகலத்தில் சர்வீஸ் சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்றனர்.

Next Story