‘‘கட்டுக்கடங்காத பொய்களை கூறுவதும் பெரிய நோய்’’ அம்ருதா பட்னாவிசுக்கு, சிவசேனா பதிலடி
‘‘கட்டுக்கடங்காத பொய்களை கூறுவதும் பெரிய நோய்’’ என முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவிக்கு சிவசேனா பதிலடி கொடுத்து உள்ளது.
மும்பை,
அவுரங்காபாத்தில் பால்தாக்கரே நினைவிடம் கட்ட 1,000 மரங்கள் வெட்டப்பட உள்ளதாக செய்திகள் பரவின. இதையடுத்து முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா சிவசேனாவை கடுமையாக விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
அதில் அவர், வெளிவேஷம் போடுவது ஒரு வகை நோய். கமிஷன் பணத்திற்காகவோ அல்லது உங்கள் வசதிக்காகவோ மரங்களை வெட்ட அனுமதிப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம் என கூறியிருந்தார்.
அம்ருதாவின் இந்த குற்றச்சாட்டுக்கு சிவசேனா மூத்த பெண் தலைவர் பிரியங்கா சதுா்வேதி பதிலடி கொடுத்து உள்ளார். இது குறித்து அவர் அம்ருதாவிற்கு டுவிட்டரில் அளித்த பதிலில், ‘‘உங்களை ஏமாற்றம் அடைய செய்ததற்காக வருந்துகிறேன். உண்மையில், நினைவிடத்திற்காக ஒரு மரம் கூட வெட்டப்படபோவதில்லை. மேயரும் இதை உறுதிப்படுத்தி உள்ளார்.
கட்டுக்கடங்காத பொய்களை கூறுவதும் ஒரு பெரிய நோய் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்’’ என கூறியுள்ளார்.

Related Tags :
Next Story