டாஸ்மாக் கடை முறைகேடுகளை தடுக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு - கலெக்டர் பதில் அளிக்க உத்தரவு
டாஸ்மாக் கடை முறைகேடுகளை தடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தேனியை சேர்ந்த உதய குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை,
தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை மற்றும் கிளப்புகள் ஏராளமாக உள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கும் மது பானங்களுக்கு உரிய ரசீது கொடுக்கப்படுவதில்லை. உற்பத்தி விலையை விட கூடுதல் விலைக்கு விற்கின்றனர். மேலும் டாஸ்மாக் கடையில் உள்ள மதுபாட்டில்களை மனமகிழ் மன்றங்களுக்கு மொத்தமாக விற்கின்றனர். இதனால் மனமகிழ்மன்றங்களில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்கின்றனர்.
இதுபோன்ற நடவடிக்கை களால் டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். இந்த விதிமீறல்கள் தேனி மாவட்ட டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் நடைபெறுகிறது. இதை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டமும் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
டாஸ்மாக் முறைகேடு பற்றி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பலன் இல்லை.
எனவே டாஸ்மாக் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க கொண்டு வரப்பட்ட சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு குறித்து தேனி மாவட்ட கலெக்டர், தேனி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story