மராட்டியத்தில் இருந்து வரத்து தொடக்கம்: பல்லாரி வெங்காயம் விலை சற்று குறைந்தது
மராட்டியத்தில் இருந்து வரத்து தொடங்கியதால் பல்லாரி வெங்காயத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
சென்னை,
விளைச்சல்-வரத்து பாதிப்பு எதிரொலியாக பல்லாரி வெங்காயத்தின் விலை ‘கிடுகிடு’ வென உயர்ந்து உச்சம் தொட்டது. வெளிச்சந்தைகளில் வெங்காயம் விலை ரூ.200-ஐ எட்டியது. பல்லாரி வெங்காயத்துக்கு போட்டியாக சாம்பார் வெங்காயத்தின் விலையும் இரட்டை சதம் அடிக்க முனைந்தது. இது போதாதென முருங்கைக்காயும் திடீரென்று விலை உயர்ந்தது. 2 நாட்களுக்கு முன்பு யாரும் எதிர்பாராத வகையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.400 வரை விற்பனை ஆனது. இது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் வெங்காயம், முருங்கைக்காயின் விலை குறைந்துள்ளது. இது இல்லத்தரசிகளுக்கு சற்றே ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சென்னை கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் நலவாழ்வு சங்கத்தின் செயலாளர் எம்.அப்துல்காதர் கூறியதாவது:-
வியாபாரம் மந்தநிலை
மராட்டியம் (சோலாப்பூர், புனே), கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து, சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக விளைச்சல்- வரத்து பாதித்து, வெங்காயம் விலை வேகமாக உயர்ந்தது. இந்த நிலையில் வியாபாரம் மந்தநிலை காரணமாக வெங்காயம் விலை குறைய தொடங்கியது. அதேவேளை சோலாபூரில் இருந்தும் வெங்காயம் வரத்து மீண்டும் தொடங்கி இருக்கிறது.
இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரூ.160 வரை விற் பனையான பல்லாரி வெங் காயம் (நாசிக்) நேற்று ரூ.20 விலை குறைந்து ரூ.140 வரை விற்பனை ஆகிறது. ரூ.120 வரை விற்பனையான ஆந்திரா வெங்காயம் ரூ.90 வரையிலும் விற்பனை ஆகிறது. சாம் பார் வெங்காயத்தின் விலையும் ரூ.5 குறைந்திருக்கிறது.
முருங்கைக்காய் விலையும் குறைந்தது
முகூர்த்த நாட்களையொட்டி முருங்கைக்காய் விலை கடந்த வாரம் ரூ.400-ஐ எட்டியிருந்தது. தற்போது முருங்கைக்காயின் விலையும் குறைந்து, ரூ.260 வரையில் விற்பனை ஆகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் வெங்காயம், முருங்கைக்காய் விலை குறைந்திருக்கிறது. தொடர்ந்து ஓரளவு குறையவும் வாய்ப்புள்ளது. ஆனால் தொடர் மழை பெய்தால் அதில் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விலை நிலவரம்
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம் (ஒரு கிலோ) வருமாறு:-
பல்லாரி- ரூ.130 முதல் ரூ.140 வரை, உருளைக்கிழங்கு- ரூ.35, கேரட்- ரூ.45, பீன்ஸ்- ரூ.55, நூக்கல்- ரூ.40, சவ்சவ்- ரூ.25, பீட்ரூட்-ரூ.40, முட்டைக்கோஸ்- ரூ.25, பச்சை மிளகாய்- ரூ.30, குடை மிளகாய்- ரூ.50, இஞ்சி- ரூ.70 முதல் ரூ.80 வரை, சேனைக்கிழங்கு- ரூ.35, சேப்பங்கிழங்கு- ரூ.35, கத்திரிக்காய்- ரூ.30 முதல் ரூ.40 வரை, வெண்டைக்காய்-ரூ.50, அவரைக் காய்-ரூ.60, கோவைக்காய்- ரூ.25, கொத்தவரங்காய்- ரூ.35, பாகற்காய் (பன்னீர்)- ரூ.40, பெரிய பாகற்காய் - ரூ.40, முருங்கைக்காய்- ரூ.250 முதல் ரூ.260 வரை, முள்ளங்கி- ரூ.20, வெள்ளரிக்காய்- ரூ.30, புடலங்காய்- ரூ.40, தக்காளி- ரூ.20 முதல் ரூ.25 வரை, காலிபிளவர் (ஒன்று)- ரூ.30 முதல் ரூ.40 வரை, பீர்க் கங்காய்- ரூ.50 முதல் ரூ.55 வரை, சுரைக்காய்- ரூ.40, சாம்பார் வெங்காயம்- ரூ.140 முதல் ரூ.150 வரை, தேங்காய்- ரூ.25 முதல் ரூ.30 வரை, வாழைக்காய் (ஒன்று) - ரூ.8 வரை.
வெளிச்சந்தைகளில்...
கோயம்பேடு மார்க்கெட்டில் விலை குறைந்தாலும் வெளிச்சந்தைகளில் இன்னும் வெங்காயம், முருங்கைக்காய் விலை குறையவே இல்லை. பல்லாரி வெங்காயமும், சாம்பார் வெங்காயமும் விலை ரூ.200 என்று அறிவித்தால் மக்கள் தயக்கம் கொள்வார் கள் என்பதால், சில கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.199 மட்டுமே என்று போர்டுகள் கூட வைத்திருக்கிறார் கள். முருங்கைக்காய் விலையும் குறையவில்லை. வெளிச்சந்தைகளில் ரூ.270 முதல் ரூ.300 வரை விற்பனை ஆகிறது.
Related Tags :
Next Story