மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Employees of Consumer Business Association protesting various demands

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,

திருவாரூர் நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. மாநில துணை பொதுச்செயலாளர் குமார், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புவனேஸ்வரன், மண்டல செயலாளர் மோகன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், பொருளாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


பருவகால ஊழியர்களுக்கு தொடர்ந்து பருவ காலத்தில் நிபந்தனை இல்லாமல் பணி வழங்க வேண்டும். ஓய்வு பெறுவோரின் அனைத்து பணபயன்களையும் தாமதப்படுத்தாமல் வழங்க வேண்டும். வரன் முறையற்ற போனஸ் பனிக்கொடை வழங்க வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டம்

சுமைப்பணி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, காப்பீட்டு திட்டம் நிலுவை தொகை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சேமிப்பு மையங்களுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
2. நெல்லையில் தூய்மை பணியாளர்கள் 11 இடங்களில் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் தூய்மை பணியாளர்கள் 11 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3. காயல்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. வேலூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கோட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
5. மீண்டும் பணி வழங்ககோரி தொழிற்சாலை முன் தொழிலாளர்கள் போராட்டம்
திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையிலிருந்து நீக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணி வழங்ககோரி குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளு முள்ளுவில் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.